தேசிய செய்திகள்

கோவில்களில் திருடி வந்த வாலிபர் பிடிபட்டார்

கோவில்களில் திருடி வந்த வாலிபர் பிடிபட்டார்

துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே மற்றும் கோலால போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கோவில்களின் கதவை உடைத்து பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் மர்மநபர்களால் திருடப்பட்டு வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கோலால போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கோவில்களில் திருடி வந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் அருகே அல்லாபுரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்று தெரிந்தது. இவர், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை பொறுக்கி விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதுதவிர சிக்பள்ளாப்பூர் மற்றும் துமகூருவில் வீடுகள் மற்றும் கோவில்களின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி வந்தது தெரிந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...