தேசிய செய்திகள்

கோவில் உண்டியல் பணம் திருட்டு; மாமநபர்களுக்கு வலைவீச்சு

கடூர் அருகே கோவில் உண்டியல் பணம் திருடிய மாமநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

  சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சிக்கபல்லேனஹள்ளி கிராமத்தில் லட்சுமி வெங்கடராமன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து கோவிலுக்கு வந்த பூசாரி பசவராஜ், முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து அவர் உடனே கடூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இதில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்