மங்களூரு,
தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த நவம்பர் இறுதியில் ஒகி புயல் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
ஒகி புயல் பாதிப்பினை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி லட்சத்தீவு யூனியன் பிரதேசம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இன்று செல்ல இருக்கிறார்.
இதற்காக கர்நாடகாவில் உள்ள மங்களூருவுக்கு வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை விமானம் ஒன்றில் லட்சத்தீவுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.