தேசிய செய்திகள்

புயல் எச்சரிக்கை: பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு

டவ்தே புயலால் பாதிக்கப்படுவோருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தற்போது டவ்தே புயல் நிலை கொண்டுள்ளதாகவும், இந்த புயல் வரும் மே 18 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, மராட்டிய மாநிலம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டவ்தே புயலால் பாதிக்கப்படுவோருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, டவ்தே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது என்றும், பாதிக்கப்படும் மக்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்