தேசிய செய்திகள்

சிசிகிச்சைக்கு வந்த மாணவி.. மயக்க ஊசி செலுத்தி டாக்டர் செய்த செயல்

மயக்கம் தெளிந்த பின் மாணவி, தனக்கு நேர்ந்த இந்த பயங்கரம் குறித்து பெற்றோருக்கு தெரிவித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மாணவி ஒருவர் கடந்த 18-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த விஜய் கிரி என்ற டாக்டர் மாணவியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று மயக்க ஊசி செலுத்தினார்.

இதில் மயங்கிய அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். மயக்கம் தெளிந்த பின் மாணவி, தனக்கு நேர்ந்த இந்த பயங்கரம் குறித்து பெற்றோருக்கு தெரிவித்தார்.

அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று. சம்பந்தப்பட்ட டாக் டரை கைது செய்தனர். மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை முதல்-மந்திரியும், சுகாதாரத் துறை மந்திரியுமான பிரஜேஷ் பதக், அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் டாக்டர் விஜய் கிரியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்ட அவர். அவரது மருத்துவ டிகிரியை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.