தேசிய செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு ஜே.இ.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து ஜே.இ.இ. மெயின் 2021 தேர்வில் மாணவன் பிரபால் தாஸ் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் நடந்த ஜே.இ.இ. மெயின் 2021 தேர்வின் முடிவுகள் கடந்த 8ந்தேதி வெளியிடப்பட்டன. இதில், முழு அளவில் 100 மதிப்பெண்களை பெற்ற 6 மாணவர்களில் ரஞ்சிம் பிரபால் தாஸ் என்ற மாணவரும் ஒருவர்.

இதுபற்றி டெல்லியில் வசிக்கும் தாஸ் கூறும்பொழுது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் தீவிர ரசிகன் நான். அவரை நான் பின்பற்றுகிறேன்.

மேற்படிப்புக்காக டெல்லி ஐ.ஐ.டி.க்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். அப்படி இல்லையெனில் இந்திய அறிவியல் மையம் பெங்களூருவில் சேர்ந்து படிப்பேன் என கூறியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்தபொழுது, அதனால் பாதிக்கப்பட்டு தாஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்த தாஸ் ஜே.இ.இ. தேர்வில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்து

உள்ளார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டபொழுது, குணமடைவதில் கவனம் செலுத்தினேன். காய்ச்சல் தணிந்தபின்னர் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன். சராசரியாக நாளொன்றுக்கு 8 மணிநேரம் வரை படிப்பேன் என்றும் தாஸ் கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்