புதுடெல்லி,
பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவார்கள் போலிருக்கிறது. பெரும்பாலானோர் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை செலவழித்து இருப்பார்கள். அவர்களது கல்வி நிறுவனங்களும் அழிந்திருக்கலாம். பலர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
அவர்களது படிப்புக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் அந்தரத்தில் தொங்குகிறது. எனவே, விதிகளை தளர்த்தி, அந்த மாணவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீட்டில் இடம் அளிக்கலாம்.
அவர்களை சேர்ப்பதால், இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்து, அடுத்த பெருந்தொற்று காலத்தில் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.