தேசிய செய்திகள்

காஷ்மீரில் அதிக தங்க பதக்கங்களை பெற்ற மாணவிகள்; கவர்னர் பாராட்டுகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாணவிகள் அதிக அளவில் தங்க பதக்கங்களை பெற்றதற்கு கவர்னர் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில், காஷ்மீர் பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 2 பிரிவுகளாக பிரித்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

முதல் பிரிவில் மொத்தம் 58 பேர் தங்க பதக்கங்களை பெற்று கொண்டனர். அவர்களில் 42 பேர் மாணவிகள் ஆவர்.

இதேபோன்று 2வது பிரிவில் 72 மாணவர்களும், 240 மாணவிகளும் தங்க பதக்கங்களை பெற்று கொண்டனர். இதுபற்றி கவர்னர் சின்ஹா கூறும்போது, பெண்களை சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் வலிமை உள்ளவர்களாக ஆக்குவது என்பது மிக முக்கியம்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் சாதனை படைத்த பல்கலை கழகத்தின் அனைத்து மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள் என தெரிவித்து கொண்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்