தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதத்துக்கு சுப்ரபாத சேவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதத்துக்கு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படும். அதன்படி நேற்று மாலை 5.19 மணியளவில் மார்கழி மாதம் பிறந்தது. அதன் காரணமாக கோவிலில் தினமும் நடந்து வந்த சுப்ரபாத சேவை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.

மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை ஒரு மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாலை 6.30 மணிக்குமேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்