புதுடெல்லி,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 82.37 டாலராக உயர்ந்தது. இது, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகம் ஆகும். எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்), நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்க்கு மேல் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று எண்ணெய் வள நாடுகளுக்கு உத்தரவிட்டு இருப்பதுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இதனால், உலக நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மிதமான விலை உயர்வையே அறிவித்துள்ளன. இருப்பினும், உற்பத்தி செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான இடைவெளியை ஈடுகட்டும்வகையில், இனிவரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படும் என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.