தேசிய செய்திகள்

கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவ் இன்று பொறுப்பேற்பு

பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவ் இன்று பொறுப் பேற்க உள்ளார். அவருக்கு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

கர்நாடக மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் இருந்து வரு கிறார். இந்த நிலையில், தாவர்சந்த் கெலாட் மாற்றப்பட்டு. அவருக்கு பதிலாக புதிய கவர்னராக சுதா யாதவை கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட் டார். சுதா யாதவ் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது கணவர் சுக்பீர் சிங் யாதவ் எல்லை பாதுகாப்பு படை யில் கமாண்டராக பணியாற்றி, கார்கில் போரில் மரணம் அடைந்திருந்தார்.

சுதா யாதவ்

இந்த நிலையில், கர்நாடகத்தின் புதிய கவர்னராக சுதா யாதவ் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் இந்த பதவி யேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான விபு பக்ரு, புதிய கவர்னர் சுதா யாதவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடு களை கவர்னர் மாளிகை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெங்களூருவுக்கு வருகை

பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இன்று பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதால். சுதா யாதவ் நேற்று மாலையில் விமானம் மூலமாக பெங்களூருவுக்கு வருகை தந்தார். பின்னர் அவர். கவர்னர் மாளிகையில் தங்க வைக் கப்பட்டுள்ளார்.

சுதா யாதவ், கர்நாடகத்தின் 14-வது கவர்னர் ஆவார். அதே நேரத்தில் மாநிலத்தில் 2-வது பெண் கவர்னர் சுதா யாதவ் ஆவார். இதற்கு முன்பு கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை வி.எஸ்.ரமாதேவி பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT