தேசிய செய்திகள்

அசாமில் ஒரே நாள் இரவில் 12 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் திடீர் உயிரிழப்பு

அசாமில் ஒரே நாள் இரவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 12 பேர் மருத்துவமனையில் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில் கவுகாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாள் இரவில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அபிஜீத் சர்மா கூறும்போது, உயிரிழந்தவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) இருந்தனர். அவர்கள் 4 நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு வந்தவர்கள். வார்டில் இருந்த 3 பேர் 24 மணிநேரத்தில் ஐ.சி.யூ.வுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

12 நோயாளிகளில் ஒருவர் கூட கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்திற்கு கீழ் இருந்தது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். அது உங்களை காப்பாற்றும் என கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு