தேசிய செய்திகள்

காஷ்மீரில் பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு - 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு

முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முகல் சாலை பகுதியில் திடீரென பனிப்பெழிவு அதிகரித்துள்ளது. சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் மலைப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு காஷ்மீர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே முகல் சாலையில் 7 மலையேற்ற வீரர்கள் பனிப்பெழிவில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இதையடுத்து கடும் பனிப்பொழிவுக்கு நடுவே 7 மலையேற்ற வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிரதான சாலைகளை மூடியிருக்கும் பனியை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு