தேசிய செய்திகள்

கரும்பு விவசாயி சின்னம் விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த சின்னம் மற்றொரு கட்சிக்கு அளித்துவிட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து தனது கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. நாளைய விசாரணையில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு