தேசிய செய்திகள்

சுனந்தா வழக்கு: தாமதமாகும் விசாரணைக்கு நீதிமன்றம் கண்டனம்

சுனந்தா புஷ்கர் இறப்பு தொடர்பான விசாரணை தாமதமாக நடைபெறுவதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

சுனந்தா மரணமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அவர் இறந்து கிடந்த அறையை காவல்துறையினர் இன்னும் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் இதனால் கடந்த மூன்றாண்டுகளில் ரூ 50 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இது தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நீதிபதி, காவல்துறையினரின் மெத்தனமான நடவடிக்கையால் மனுதாரர் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளார் விசாரணை என்ற பெயரில் பெரும் நிதியிழப்பை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலளித்த காவல்துறையினர் சமீபத்தில்தான் தடவியல் சோதனையாளர்கள் ஹோட்டல் அறைக்கு சென்று பல்வேறு ஆதாரங்களை திரட்டி வந்துள்ளனர். எனவே விசாரணையை முடிக்க அவகாசம் கேட்டனர். மேற்கொண்டு அந்த அறை தேவைப்படாது என்ற நிலை வரும் வரை அதை ஒப்படைக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு