தேசிய செய்திகள்

உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது

உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதவற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, அதற்கு பதிலாக இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அயோத்தியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கடந்த 5ந்தேதி அளித்தது.

இதை ஏற்பது குறித்து நீண்ட பரிசீலனையில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம், இந்த நிலத்தை ஏற்றுக்கொண்டது. இதை தெரிவித்த வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூக்கி, அங்கு மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க இருப்பதாக கூறினார்.

அரசு வழங்கும் அந்த நிலத்தில் மசூதியுடன் இந்தோஇஸ்லாமிய மையம், ஆஸ்பத்திரி, பொது நூலகம் ஆகியவையும் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்