தேசிய செய்திகள்

எடியூரப்பாவுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் காங்கிரஸ்-மஜத லிங்காயத்து எம்.எல்.ஏ.க்களுக்கு மடாதிபதிகள் எச்சரிக்கை

எடியூரப்பாவுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள லிங்காயத்து எம்எல்ஏக்களுக்கு மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பெங்களூர்

லிங்காயத்து மடங்களின் தலைவர்களை வைத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் மிரட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் 17 சதவீதம் உள்ள, லிங்காயத்துகள் எப்போதுமே பாஜகவின் வாக்கு வங்கி. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் சுமார் 20 பேர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், அவர்கள் ஆதரவை பாஜகவிற்கு பெற மத தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா முன்பு முதல்வராக இருந்தபோது லிங்காயத்து மடங்கள் செய்து வரும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக நிறையவே நன்கொடைகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், லிங்காயத்து சமூக எடியூரப்பாவுக்கே லிங்காயத்து எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது லிங்காயத்து மக்களிடம் சொல்லி உங்களை புறக்கணிக்க அறிவுறுத்தப்படும் என மதத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

104 உறுப்பினர் பலம் மட்டுமே கொண்டுள்ள பாஜக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க இதுபோன்ற வழிகளையும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு