தேசிய செய்திகள்

விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க முடியுமா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க முடியுமா என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா உள்ளிட்டோர் தாக்கல் செய்ய பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியுமா? என கேட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு