தேசிய செய்திகள்

23 நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலிஜீயம் ஒப்புதல்

நாட்டில் 6 ஐகோர்ட்டுகளுக்கு 23 நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, வக்கீல் ஜெ.சத்தியநாராயண பிரசாத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு 4 வக்கீல்களும், ஒரு நீதிசார் அலுவலரும் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டதற்கு கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.

அலகாபாத் ஐகோர்ட்டுக்கு ஒரு வக்கீலையும், கர்நாடகா ஐகோர்ட்டுக்கு 4 வக்கீல்களையும் நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு இரு வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு கொலிஜீயத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் பணியாற்றிவரும் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்