புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் சிபாரிசு செய்திருந்தது. ஆனால், அந்த சிபாரிசு தொடர்பான கோப்புகளை கொலிஜியத்துக்கே மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளது.
இந்நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக, கொலிஜியம் கூட்டத்தை அவசரமாக கூட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முடிவு செய்துள்ளார். இத்தகவலை சுப்ரீம் கோர்ட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்தகைய கூட்டத்தை கூட்டுவது இயல்பானதுதான், கூட்டம் விரைவில் நடைபெறும் என்று அவர் கூறினார்.