தேசிய செய்திகள்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இறுதி கெடு

உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இறுதி கெடு விதித்துள்ளது.

தினத்தந்தி

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

புதுச்சேரியில் வார்டு மறுவரையறை பணிகளை 4 வாரங்களுக்குள் முடித்து, உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 2018, மே 8-ந் தேதி உத்தரவிட்டது. வார்டு மறுவரையறை பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 7-ந் தேதி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் ஆணையர் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை என்று கூறி, மனுதாரர் டி.அசோக் குமார் சார்பில், தேர்தல் ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வக்கீல் வி.பாலாஜி தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26-ந் தேதி விசாரித்தபோது, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க புதுச்சேரி தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி தேர்தல் ஆணையர் சார்பில் வக்கீல் மாதவி திவான் ஆஜராகி, புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய அவகாசம் தேவை என வாதிட்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் வி.பாலாஜி, வார்டு மறுவரையறை பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளன என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புதுச்சேரியில் வார்டு மறுவரையறை பணிகளை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவில் தெரிவித்தனர். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பது வருந்த தகுந்த நிலை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்