தேசிய செய்திகள்

சர்ச்சை தீர்ப்புகளை வழங்கிய நாக்பூர் கிளை நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு என தகவல்

பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகள் வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிபுஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரை வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பும். இதன் அடிப்படையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். சில சமயங்களில் இதுபோன்று பரிந்துரைகளை கொலிஜியம் கூடுதல் விவரங்களுக்காக திரும்பப்பெற முடியும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது