தேசிய செய்திகள்

நீட் விவகாரம்: மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு

நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாகவும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள்  தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு  இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.நீட் கவுன்சிலிங் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து