தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய இந்து அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய இந்து அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கு விசாரணை முடிவடைந்தது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய கோர்ட்டு 3 நாள் அனுமதி அளித்தது.

ஆனால், மனுதாரர்களில் ஒன்றான நிர்வாணி அகாரா 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நிர்வாணி அகாரா தரப்பு மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரானார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் விக்ரகத்துக்கு பூஜை செய்ய உரிமை கோருவது தொடர்பாக, எழுத்துப்பூர்வ கருத்துகளை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, அந்த அமைப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்