கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

3-வது முறையில் தேர்ச்சி: மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத உரிய அமைப்பை நாடலாம் - சுப்ரீம் கோர்ட்டு

மெயின் தேர்வில் 3-வது முறையில் தேறியவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதிக்க கோரி உரிய அமைப்பை நாடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜே.இ.இ. மெயின் தேர்வை 3-வது முறையாக எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதிக்க கோரி மராட்டியத்தைச் சேர்ந்த தேஜஸ் பாபாசகேப் வீர் உள்ளிட்ட 5 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சோனல் ஜெயின் ஆஜராகி, மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வாதிட்டார்.

மற்றொரு வக்கீல் சுமந்த் ஆஜராகி, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வை எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களுக்கு அனுமதி இல்லை என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். இதில் கோர்ட்டு எப்படி தலையிட முடியும்? இதுதொடர்பாக உரிய அமைப்பிடம் (தலைவர், ஜே.இ.இ. அட்வான்ஸ் அலுவலகம், கரக்பூர், மேற்கு வங்காளம்) முறையிட அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் முறையிடும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கடந்த மார்ச் 15-ந்தேதி பிறப்பித்துள்ள உத்தரவின்படியும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம். மேலும் மனுக்கள் மீது ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்கு முன்னர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். மனு முடித்துவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்