புதுடெல்லி,
முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணையை கட்ட மற்றும் வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரியும், முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.