இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஜெயசுகின் ஆஜராகி வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ஜெர்மன் போன்ற வளர்ந்த நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கையும், நமது நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்து, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்