கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா 2-வது அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்நிலையில், வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 11-ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்த கேரள அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில், பள்ளித் தேர்வை நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என்று கேரள ஐகோர்ட்டு கூறிவிட்டது.அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ரசூல்ஷான் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், கேரளாவில் அபாயகரமான அளவுக்கு கொரோனா சூழல் நிலவுகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் கேரளாவில் உள்ளனர். இந்நிலையில் 11-ம் வகுப்பு வயது குழந்தைகளை அபாயத்துக்கு உள்ளாக்க முடியாது என்று கூறி, அடுத்த விசாரணை வரை, 11-ம் வகுப்பு தேர்வை நேரடியாக நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தனர். பின்னர் அடுத்த விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து