Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ.யும் அவரை கைது செய்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்