தேசிய செய்திகள்

நாகேஷ்வரராவ் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

புதுடெல்லி,

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு ஆலோசனைக்கு பிறகு அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூன கார்கே மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதையடுத்து, சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வரராவ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை செய்யப்பட உள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு