தேசிய செய்திகள்

வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி மறுமதிப்பீடு கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஐகோர்ட்டின் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் கொண்ட அமர்வு, வருமான வரித்துறைக்கு இதற்கான அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோல காங்கிரஸ் முன்னணி தலைவர் ஆஸ்கர் பெர்னான்டசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்ப்பு ராகுல் காந்தி, சோனியா காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை