தேசிய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 1-ந் தேதி விசாரணை

சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுவை அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனையடுத்து அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதியப்பட்டது.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி அவர் சார்பில் வக்கீல் கார்த்திகேய சிங், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார்.இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து