தேசிய செய்திகள்

சூரத்கல் சுங்கச்சாவடி முழுமையாக செயல்படாது; இன்று நள்ளிரவு முதல் அமல்

இன்று நள்ளிரவு முதல் சூரத்கல் சுங்கச்சாவடி முழுமையாக செயல்படாது என்று கலெக்டர் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மங்களூரு:

சூரத்கல் சுங்கச்சாவடி

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு-உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில் முக்கா, சூரத்கல் ஆகிய பகுதியில் சில கிலோ மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உள்ள 2 சுங்கச்சாவடிகளிலும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி வந்தனர். மேலும் இதனை கண்டித்து அந்தப்பகுதி மக்கள் பெரிய அளவில் போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சூரத்கல் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முழுமையாக செயல்படாது

இந்த நிலையில் சூரத்கல் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி வருகிற 1-ந்தேதி (நாளை) முதல் சூரத்கல் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது. அந்த சுங்கச்சாவடி இனிமேல் முழுமையாக செயல்படாது. வாகனங்கள் எந்தவித கட்டணமும் இன்றி சுங்கச்சாவடியை கடக்கலாம் என்று கூறியிருந்தார்.

இன்று நள்ளிரவு

இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சூரத்கல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி