தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் உறவினருக்கு பீகார் மந்திரி சபையில் இடம்

பா.ஜனதாவை சேர்ந்த 9 பேர் உள்பட மொத்தம் 17 புதுமுகங்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் 7-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்று கிட்டத்தட்ட 3 மாதங்கள் நெருங்கும் நிலையில் நேற்று முதன்முறையாக பீகார் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதில் அண்மையில் பீகார் எம்.எல்.சி. தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சையது ஷாநவாஸ் ஹூசைனுக்கும் மந்திரிசபையில் இடம் கிடைத்து உள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த 9 பேர் உள்பட மொத்தம் 17 புதுமுகங்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு மாநில கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விரிவாக்கத்தின் மூலம் பீகார் மந்திரிசபையில் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. பீகார் மந்திரிசபையில் பா.ஜனதா மந்திரிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக மந்திரி சபையில் இணைத்துக்கொள்ளபட்ட 17 பேரில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உறவினர் நீரஜ் சிங் பப்லுவும் அடங்குவார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து