தேசிய செய்திகள்

தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா பதவியேற்பு; அடுத்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்துவார்

தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா பதவியேற்றார். அடுத்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்துவார்.

தினத்தந்தி

புதிய தலைமை தேர்தல் கமிஷனர்

நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் சுனில் அரோரா. இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து 24-வது தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா (வயது 63) நியமிக்கப்பட்டார். அவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், 1980-ம் ஆண்டின் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் தொகுப்பை சேர்ந்தவரும் ஆவார். இவர் வருமான வரித்துறையில் 39 ஆண்டு காலம் பணியாற்றி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக, 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு, அந்தப் பதவியை வகித்துள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தல் நடத்துவார்

கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இப்போது இவர் தலைமை தேர்தல் கமிஷனர் ஆகி உள்ளார்.நேற்று இவர் தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார்.இவரது பதவிக்காலம், அடுத்து ஆண்டு மே 14-ந் தேதி முடிவுக்கு வருகிறது.இவரது தலைமையில் தேர்தல் கமிஷன், அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது