புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் துவேதி கூறும்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மிதா தேவ்வை அகில இந்திய மஹிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்துள்ளார். தற்போது ஷோபா ஓசா இப்பதவியில் உள்ளார்.
பதவியிலிருந்து ஓசா நீக்கப்பட்டாலும் அவரது பணியை காங்கிரஸ் தலைவர் பெரிதும் பாராட்டியதாக கூறப்படுகிறது.