இதனை அடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மற்ற ஐ.எஸ். அமைப்பினர் மற்றும் அவர்களுடனான தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
துருக்கியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்நாட்டில் இருந்து கடந்த பிப்ரவரியில் வேளுவா நாடு கடத்தப்பட்டார். அதன்பின்னர் மற்றொரு பெயரில் போலி பாஸ்போர்ட் ஒன்றை அவர் பெற்றுள்ளார்.
இதனை வைத்து கொண்டு துருக்கிக்குள் நுழைய வேளுவா முயன்றுள்ளார். அந்த முயற்சியை முறியடித்த அந்நாட்டு போலீசார் அவரை மீண்டும் நாடு கடத்தினர்.
இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவர் என போலீசார் கூறியுள்ளனர்.