தேசிய செய்திகள்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையவர் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ஸ்லேமர் மாவட்டத்தில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 55 வயதான ஹாசி கான் என்பவரை அவரது கிராமத்தில் வைத்து ராஜஸ்தான் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாசி கான் பல முறை பாகிஸ்தான் சென்று வந்திருப்பதும், இவருக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசி கானிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், சில காலமாக ஹாசி கான் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கியிருந்தார். ஹாசி கானை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சில இடங்களில் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு