தேசிய செய்திகள்

பாகிஸ்தான் உளவாளி அருணாசலபிரதேசத்தில் கைது

பாகிஸ்தான் உளவாளி என சந்தேகப்படும் நபர் ஒருவர் அருணாசலபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

அருணாசல பிரதேசத்தில் அன்சவ் மாவட்டத்தில் இந்தியா -சீனா எல்லை அருகே பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பை சேர்ந்தவர் என்று சந்தேகப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பெயர் நிர்மல் ராய். இவர் அசாம் மாநிலம் தினுஷ்கியா மாவட்டம் சதியா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

ராய் கிபித்து மற்றும் டிச்சு ஆகிய இரு படைப்பிரிவுகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே பணியாற்றி வந்தார். இவர் ஜனவரி 6 ஆம் தேதி இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அருணாச்சல பிரதேச போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். ராய் ஒரு நேபாள சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் 2016 மற்றும் 2018 க்கு இடையில் துபாயில் ஒரு பர்கர் கடையில் பணிபுரிந்தார் பின்னர் அவர் கிபித்து வந்துள்ளார் என மாநில டிஜிபி எஸ்பிகே சிங் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு