தேசிய செய்திகள்

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,

பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களில் கட்டண வசூல் இல்லை. மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரெயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது. புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்