தேசிய செய்திகள்

தேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம்

பணியில் அலட்சியமாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

உப்பள்ளி:-

உப்பள்ளி-தார்வார் மேற்கு சட்டசபை தொகுதி 105-வது பூத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் சச்சின் நாயக். இவர் சரியாக பணிக்கு வராமல் இருந்ததுடன், பணியில் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குருதத்த ஹெக்டேவுக்கு புகார்கள் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அப்போது, தேர்தல் அதிகாரி சச்சின் நாயக் பணியில் அலட்சியமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் குருதத்த ஹெக்டே உத்தரவிட்டுள்ளார்.