தேசிய செய்திகள்

ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

அதன்படி, ஏப்ரல் 1 முதல் மெத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ. 500 முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து