தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளியை கொண்டாடலாம் சுப்பிரமணியன் சாமி பேட்டி

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளியை கொண்டாடலாம் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சாமி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியானது விரைவில் தொடங்கும், பக்தர்கள் அடுத்த ஆண்டு தீபாவளியை அங்கு கொண்டாடலாம். அடுத்த தீபாவளி அயோத்தியில் புதியதாக கட்டப்படும் ராமர் கோவிலில் கொண்டாடப்படும். எல்லாம் தயாராகிவிட்டது. சுவாமி நாராயண் கோவிலை போன்று உள்கட்டமைப்பை மட்டும் பொருத்தினால் கோவில் தயாராகிவிடும். நரசிம்ம ராவ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் அங்கு கோவில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கோவிலை கட்டுவதற்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி பெறுவோம் என கூறிஉள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...