தேசிய செய்திகள்

கசப்பான உறவு இனிப்பாக மாறுமா...! மோடி-அமித் ஷாவுக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்து உள்ளார்.

புதுடெல்லி:

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் மோதல் நாடறிந்த விஷயம்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். இறுதியாக மம்தா பானர்ஜி தேர்தலில் வென்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மாறவில்லை.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்து உள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் விளையும் மிகச் சிறந்த மாம்பழ வகைகளை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அதோடு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளுடன் மாம்பழங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் கூட இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்