அதற்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒட்டுமொத்த உலகுக்கும் தலீபான்கள் ஒரு அச்சுறுத்தல்தான். இதற்கு முன்னர்கூட வன்முறையால் அவர்களால் எந்த ஒரு முடிவையும் கொடுக்க முடியவில்லை. அவர்கள் முன்னேறியிருப்பார்கள் என நாங்கள் கருதவில்லை. தலீபான்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று தெரிவித்தார்.
தலீபான்கள் பெண்களை பெண்களாகவே கருதமாட்டார்கள் எனவும், அவர்களை மதிக்கமாட்டார்கள் எனவும் கூறிய மேனகா, பெண்களை வெறும் குழந்தைகள் பெறுபவர்களாக மட்டுமே கருதுவதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.