தேசிய செய்திகள்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக பதவியேற்றார்

பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்தியாக பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.

இந்நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரிசபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய மந்திரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மத்திய மந்திரியாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி