தேசிய செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிடக்கோரிய மனு; சுப்ரீம்கோர்ட்டில் 1-ந்தேதி விசாரணை

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிடக்கோரிய மனுவை 1-ந் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நேற்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

புதுடெல்லி,

தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

15 நாட்களுக்குள்...

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு 3 முறை உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் ஒன்றில் ஜூலை 30-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கின் மீது அரசு தரப்பில் இதுவரை 3 முறை வாய்தா வாங்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை விசாரணை

சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம், மதுரை சார்பில் நேற்று வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி பிரச்சினையின் அவசரம் கருதி பொதுநல மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று (1-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு