சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களை கடுமையாக பாதித்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளானார்கள்.
இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 59 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தினசரி தொற்று பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை கேரளா வகிக்கிறது. அங்கு 31 ஆயிரத்து 337 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையுடன் முடிந்த ஒரு நாளில் தமிழ்நாட்டில் புதிதாக 34 ஆயிரத்து 875 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், 365 பேர் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் 32 ஆயிரத்து 762 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடகாவில் 34,281- பேரும், மராட்டியத்தில் 34,031- பேரும் நேற்று தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.