புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள், எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களையும் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
2-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ கலந்து கொண்டார்.
மேலும் இதில், நாடாளுமன்ற எம்.பி.க்களான திருமாவளவன், ஜோதிமணி, செல்லக்குமார், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன் மற்றும் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.