சென்னை,
சென்னையில் வெயில் வாட்டிய நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. வழக்கமாக 20ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும். அது 2 நாட்களுக்கு பிறகு தான் தெரியும்.
தற்போது கேரளா மற்றும் அதை சுற்றி மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.